3 நானும் ஒரு கவிஞனாய்….

ஷேக்ஸ்பியர் காலத்தில் நீ

பிறக்கவில்லயே,

பிறந்திருந்தால்

அவர் எழுதிய கவிதைகளெல்லாம்

உன்னை மட்டுமே சார்ந்திருக்கும்,

ஜுலியட் கதாபாத்திரம் பெயர்

மாற்றம் கண்டிருக்கும்,

ரோமியோவை தவிர்த்து ஷேக்ஸ்பியரே

கதை நாயகனாக

நடித்துருப்பார்,

இன்னும் பல ஆயிரம் கவிதைகளை

உனக்காக வடித்துருப்பார்,

அவரின் கற்பனைகள் யாவும்

மறைந்திருக்க கூடும்,

உன் அழகை மட்டும்

நினைத்திருத்தல் ஆகும்,

அழகான வார்த்தைகள் பலவும்

பிறந்திருக்க வேண்டும்,

 

இப்படி

நான் நினைத்தன யாவும்

நடக்க பெற்றிருந்தால்

நானும் ஒரு

கவிஞனாய்

உருவெடுத்திருக்கலாகாதே…..

tumblr_lwdpm89Rb51qirkq6o1_500

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *